ஆப்பிளின் ஐபோன் 12 வரிசை 2020 ஆம் ஆண்டில் சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். ஐபோன் 12 வரிசையை பற்றி இப்போது வரை வெளிக்கசிந்துள்ள தகவல்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
ஆப்பிள் நிறுவனம் 4 வகையான ஸ்மார்ட் போன்களை சந்தைக்கு கொண்டு வருகிறது. 5.4" அளவீடு கொண்ட சிறிய மொபைல் ஐபோன் 12, 6.1" அளவீடு கொண்ட ஐபோன் 12 மேக்ஸ், 6.1" அளவீடு கொண்ட ஐபோன் 12 ப்ரோ, 6.7" அளவீடு கொண்ட ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ப்ரோ ஆகியவை அந்த 4 வகையான ஸ்மார்ட்போன்களாகும். அனைத்து ஐபோன் 12 வரிசை போன்களும் OLED வகை காட்சிக்கருவிகளை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை சமீபத்திய ஐபாட் ப்ரோ வடிவமைப்பை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 12 வரிசையில் வரும் அனைத்து மொபைல் போன்களும் 5ஜி தொழிற்நுட்பத்தில் உருவாக்கம் பெறுகின்றன. மேலும் ஆப்பிள் A14 பயோநிக் என்ற செயலியையும் கொண்டு உருவாக்கப்படுகிறது. ப்ரோ வகையான ஸ்மார்ட் போன்கள் புதுப்பிப்பு வீதம் 120 Hz மற்றும் மூன்று கேமராவைக் கொண்டும் செயல்படும். ப்ரோ வகை அல்லாத ஸ்மார்ட் போன்கள் 60 Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் இரட்டை கேமராக்களை கொண்டும் செயல்படும்.
ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் நேவி ப்ளூ வண்ணங்களில் சந்தைக்கு வரும் என எதிர்ப் பார்க்கப்படுகிறது. ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மேக்ஸ் 4GB RAM திறன் கொண்டும் ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 6GB RAM திறன் கொண்டும் செயல்படும். 64GB-லிருந்து 128GBவரை ROM வேறுபடுகிறது.
ஐபோன் 12 எனும் அடிப்படை ஸ்மார்ட் போன் 650 USD விலைக்கு சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மை என்றால் ஆப்பிள் இரண்டாவது முறையாக தனது அடிப்படை ஸ்மார்ட் போனை குறைவான விலைக்கு சந்தைக்கு கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னாள் இந்நிறுவனம் ஆப்பிள் 11 உடைய விலை ஆப்பிள் XR ஐ விட 50USD குறைவான விலைக்கு சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. ஐபோன் 12 மேக்ஸ் 750USD விலைக்கு சந்தைக்கு வருகிறது. ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 999 USD மற்றும் 1099 USD விலைக்கு சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.
ஐபோன் 12 வரிசை ஸ்மார்ட் போன்கள் 5ஜி தொழிற்நுட்பத்தில் உருவாக்கம் பெற்றிருப்பினும் மற்ற நிறுவனங்கள் போல 5ஜி தொழிற்நுட்பத்திற்க்காக கூடுதலான விலையை சந்தைக்கு கொண்டு வரவில்லை. COVID-19 தொற்றால் ஐபோன் 12 வரிசை ஸ்மார்ட் போன்கள் செப்டம்பர் அல்லது அதற்கு மேல் சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பு: ஆப்பிள் இன்னும் அதிகாரப்பூர்வமாக ஐபோன் 12 வரிசையை அறிமுகப்படுத்தவில்லை என்பதால், மேலே உள்ள அனைத்து தகவல்களும் எதிர்பார்க்கப்படும் தகவல்கள் மட்டுமே.
மற்ற செய்திகளையும் படித்து பகிருங்கள்:
வெயில் காலங்களில் ஸ்மார்ட் போன் சூடாவதை தவிர்க்க 10 வழிமுறைகள்
5ஜி தொழிற்நுட்பம் மற்றும் ஸ்னாப்டிராகன் செயலியில் உருவாக்கம் பெற்ற போகோ F2 ப்ரோ
கூகுள் மீனா vs பேஸ்புக் ப்ளெண்டர் - சாட்பாட் யுத்தம்
COVID-19 காலத்தில் புதிய அம்சங்களுடன் சந்தைக்கு வந்துள்ள அலெக்சா
எம்.ஐ 10 மாடலை 108MP க்வாட் கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 865 செயலியுடன் அறிமுகப்படுத்தியது ஸியோமி
டெஸ்க்டாப்பில் புதுப்பிப்பு கொண்டு வந்துள்ள பேஸ்புக்
சர்வதேச முடக்குதல் காலத்தில் இண்டர்நெட் இணைப்பை வேகமாக்கும் 5 எளிய முறைகள்
பிட்பேண்டில் ஜி.பி.எஸ் ஆ? விற்பனைக்கு வருகிறது பிட்பிட் சார்ஜ் 4
வை-பை (Wi-Fi) மூலம் இலவசமாக பேசுவது எப்படி?
யூ.பி.ஐ மூலமும் சந்தாவைச் செலுத்த அனுமதி வழங்கிய யூட்யூப்
வாட்ஸாப்: குழும அழைப்பின் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு??
GST திருத்தத்திற்கு பின் Rs.20,000க்குள் கிடைக்கும் சிறப்பான 5 ஸ்மார்ட் போன்கள்
நிகழ்நிலை வீடியோ சந்திப்பிற்கு "ZOOM" செயலி பாதுகாப்பானதா? மாற்றுச் செயலி பாதுகாப்பானதா??
எந்தெந்த நிறுவனங்கள் COVID-19 பாதிப்பின் காரணமாக ஸ்மார்ட்போன்களின் வாரண்ட்டி நாட்களை நீட்டித்துள்ளன?
மோட்டோரோலா எட்ஜ்+ பிரீமியம் ஸ்மார்ட் போன்களுக்கு போட்டியாக இருக்குமா ?
ஒன்பிளஸ் 8 சீரிஸ்: ஒன்பிளஸ் தயாரிப்பில் அதன் தடத்தை இழந்துவிட்டதா?