எண்ணிலடங்கா அம்சங்கள் மூலம் டேப்லெட்ஸ் மேன்மேலும் ஆற்றல் வாழ்ந்தவைகளாக உருவாகி வருகிறன்றன. அண்மையில் சந்தைக்கு வந்துள்ள ஆப்பிள் ஐபாட் ப்ரோ மற்றும் மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ போன்றவை டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் போன்றவற்றை விட மிகவும் ஆற்றல்மிக்கவையாக உள்ளன. டேப்லெட்ஸ் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் போன்றவற்றை விட சிறப்பாக செயல்புரிகிறதா என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
டேப்லெட்சுடைய நன்மைகள்
டேப்லெட்ஸ்கள் அளவில் சிறியதாகவும், பயன்படுத்துவதற்கு வசதியாகவும் மற்றும் கைக்கு அடக்கமாகவும் உள்ளன. மேலும் அளவில் சிறியது என்பதால் அவற்றை எளிதாக எடுத்துச் செல்லலாம். மேலும் மின்னாற்றலை சேமிக்கும் திறனும் அதிகம் கொண்டுள்ளது. லேப்டாப் 5 மணி நேரங்கள் பயன்படுத்தும் அளவிற்கு மின்னாற்றலை சேமிக்கிறது, ஆனால் டேப்லெட் 10மணி நேரங்கள் பயன்படுத்தும் அளவிற்கு மின்னாற்றலை சேமிக்கின்றன. மேலும் டேப்லெட் டச் தொழிற்நுட்பத்தை தழுவியவவை, அதோடு பிரிக்கக்கூடிய எழுத்து அச்சுக்களை(Keyboard) கொண்டவை. மேலும் டேப்லெட் செல்லுலார் நெட்ஒர்க்கை பயன்படுத்தி இண்டெர்நெட் வலையுடன் இணைக்கலாம், ஆனால் லேப்டாப் வை-பை தொழிற்நுட்பத்தின் உதவியால் இண்டெர்நெட் வலையுடன் இணைகிறது.
லேப்டாப் நன்மைகள்
லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் போன்றவை செயல்திறன் மிக்க செயலிகளை(ப்ரோஸசர்) கொண்டு இயங்குகின்றன, மேலும் இவற்றின் காட்சித்திறன் மிகவும் பெரியவை. லேப்டாப் விர்ச்சுவல் கீபோர்ட் பயன்படுத்தாமல் டெடிகேடட் கீபோர்ட் கொண்டு இயங்குவதால் ஆவணங்கள் மற்றும் இ-மெயில் செய்வதற்கு வசதிகள் நிறைந்தவை. அதிக அளவு தகவல் சேகரிக்கும் திறன் மற்றும் இன்புட் போர்ட் எண்ணிக்கை அதிகம் என்பதால் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது. லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் விண்டோஸ் மற்றும் மேக் ஓ.எஸ்கள் பல வருடங்களாக இருப்பதால் லேப்டாப்பில் உள்ள செயலிகள் திருத்தப்பட்டதாகவும் புதுமையானதாகவும் இருக்கும்.
எது சிறந்தது?
இரண்டையும் ஒப்பிடுகையில் லேப்டாப் அறிய செயல்களை செய்வதால் மதிப்பு மிக்கதாக உள்ளது. லேப்டாப்பிற்கு மாற்று என்றால் அது நிச்சயம் டேப்லெட்ஸ் தான் ஆனால் இந்த விகுதிச்சாரம் மாறுவதற்கு நெடுகாலம் தேவை என்பதில் ஐயம் இல்லை
மற்ற செய்திகளையும் படித்து பகிருங்கள்:
வெயில் காலங்களில் ஸ்மார்ட் போன் சூடாவதை தவிர்க்க 10 வழிமுறைகள்
5ஜி தொழிற்நுட்பம் மற்றும் ஸ்னாப்டிராகன் செயலியில் உருவாக்கம் பெற்ற போகோ F2 ப்ரோ
கூகுள் மீனா vs பேஸ்புக் ப்ளெண்டர் - சாட்பாட் யுத்தம்
COVID-19 காலத்தில் புதிய அம்சங்களுடன் சந்தைக்கு வந்துள்ள அலெக்சா
கூகிள் லென்ஸ் vs மைக்ரோசாப்ட் ஆபீஸ் லென்ஸ்: உங்கள் ஸ்மார்ட் போனிற்கு எது மிகவும் பொருத்தமானது