டெஸ்க்டாப்பில் புதுப்பிப்பு கொண்டு வந்துள்ள பேஸ்புக்

by Srinivasan
3 minutes
டெஸ்க்டாப்பில் புதுப்பிப்பு கொண்டு வந்துள்ள பேஸ்புக்

பேஸ்புக் நிறுவனம் தனது வலை செயலி பயன்பாட்டு முறையில் எதிர்பார்த்த இருண்ட பயன்முறை (Dark Mode) மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. 

இந்த சீர்திருத்தத்தின்படி பேஸ்புக்,  காட்சி ஒழுங்கீனத்தை அகற்றி தெளிவான தளவமைப்பைக் கொண்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனம் 2019-ல்  வலை செயலியின் தளவமைப்பினை மறு சீரமைப்பு செய்ய போவதாக அறிவித்திருந்தது. தற்போது ஒரு வருடத்திற்கு பிறகு மே 8ம் தேதி அம்மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. செயலியின் காட்சி மாற்றத்திற்கான தகவல்களை தனது வலைதளப்பதிவு வழியாக தெரிவித்துள்ளது.

பேஸ்புக் வலை பயன்பாட்டில்  இருண்ட பயன்பாட்டை இயக்குவதற்கான படிகள்:

1. பேஸ்புக் வலை செயலியில் உங்கள் கணக்கில் உள்நுழைக.

2. செயலியின் வலது மூலையில் உள்ள ட்ராப்-டவுன் பட்டியலை அழுத்தவும். 

3. பட்டியலில் உள்ள புதிய பேஸ்புக் விருப்பத்திற்கு மாறவும். 

4. திரையில் ஒரு வருகை செய்தியினை காணலாம் அதில் மறு சீரமைக்கப்பட்ட  வலைச்  செயலியின் சுருக்கமான அம்சங்கள் குறிப்பிடப்பட்டு இதுற்கும்.

5. நெக்ஸ்டை (Next) அழுத்தவும் பின்பு அடுத்த விண்டோவில் டார்க் தீமை தேர்வு செய்யவும். 

6. நீங்கள் விருப்பப்பட்டால் மீண்டும் டார்க் பயன்பாட்டை செயலிழக்கச் செய்யலாம். 

7. கணக்கு பட்டியலிருந்து பயனர் மீண்டும் கிளாசிக் பேஸ்புக் அம்சத்திற்கு திரும்ப இயலும்.

சமீபத்திய புதுப்பித்தலுடன், பேஸ்புக் ஏற்றுதல் நேரங்களைக் குறைத்துவிட்டதாகக் கூறுகிறது, மேலும் பயனர்கள் தூய்மையான தோற்றம் மற்றும் தெளிவான எழுத்துக்கள் மூலம் மெனுக்களை எளிதாகக் காணலாம்.

இந்த நிறுவனம் டார்க் பயன்பாட்டை வாட்ஸாப் மற்றும் மெசேன்ஜ்ற்கு கொண்டு வந்த நிலையில் எதிர் காலத்தில் பேஸ்புக் மொபைல் செயலிக்கும் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

மற்ற செய்திகளையும் படித்து பகிருங்கள்:

சர்வதேச முடக்குதல் காலத்தில் இண்டர்நெட் இணைப்பை வேகமாக்கும் 5 எளிய முறைகள்

பிட்பேண்டில் ஜி.பி.எஸ் ஆ? விற்பனைக்கு வருகிறது பிட்பிட் சார்ஜ் 4

வை-பை (Wi-Fi) மூலம் இலவசமாக பேசுவது எப்படி?

யூ.பி.ஐ மூலமும் சந்தாவைச் செலுத்த அனுமதி வழங்கிய யூட்யூப்

எம் ஐ 10 யூத் (Mi 10 Youth 5G) : 5ஜி மற்றும் க்வாட்(Quad) கேமரா தொழிற்நுட்பத்தில் உருவாக்கம் பெற்ற ஸியோமீயின் புதிய ஸ்மார்ட் போன்

வாட்ஸாப்: குழும அழைப்பின் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு??

GST திருத்தத்திற்கு பின் Rs.20,000க்குள் கிடைக்கும் சிறப்பான 5 ஸ்மார்ட் போன்கள்

நிகழ்நிலை வீடியோ சந்திப்பிற்கு "ZOOM" செயலி பாதுகாப்பானதா? மாற்றுச் செயலி பாதுகாப்பானதா??

எந்தெந்த நிறுவனங்கள் COVID-19 பாதிப்பின் காரணமாக ஸ்மார்ட்போன்களின் வாரண்ட்டி நாட்களை நீட்டித்துள்ளன?

மோட்டோரோலா எட்ஜ்+ பிரீமியம் ஸ்மார்ட் போன்களுக்கு போட்டியாக இருக்குமா ?

ஒன்பிளஸ் 8 சீரிஸ்: ஒன்பிளஸ் தயாரிப்பில் அதன் தடத்தை இழந்துவிட்டதா?