பிட்பேண்டில் ஜி.பி.எஸ் ஆ? விற்பனைக்கு வருகிறது பிட்பிட் சார்ஜ் 4

by Rajan
2 minutes
பிட்பேண்டில் ஜி.பி.எஸ் ஆ? விற்பனைக்கு வருகிறது பிட்பிட் சார்ஜ் 4

பிட்பிட் அண்மைக் காலத்தில் பிட்பிட்  சார்ஜ் 3யை புதுப்பித்து பிட்பிட் சார்ஜ் 4 பிட்னெஸ் ட்ராக்கரை உருவாக்கியுள்ளது. இதன் முக்கிய யுஎஸ்பி அதன் உள்ளமைக்கப்பட்ட ஜிபிஎஸ் டிராக்கர் ஆகும்

பிட்பிட் சார்ஜ் 4 வடிவமைப்பில் அதன் முன்னோடி போலவே அமைக்கப்பட்டுள்ளது. பிட்பிட் மோனோக்ரோம்  ஒ.எல்.இ.டி வகை காட்சிப்பொருளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது பிட்பிட் சார்ஜ் 4. இந்த காட்சிப்பொருள் உள்ளுணர்வு கொண்டது, சூழ்நிலையின் ஒளி தன்மையை தழுவி தனது ஒளிரும் திறனை மாற்றிக் கொள்கிறது.

பிட்பிட் சார்ஜ் 4 அதிக அளவிலான அம்சங்களை கொண்டு உருவாக்கம் பெற்றுள்ளது. ஜி.பி.எஸ் ட்ராக்கர், இதயம் துடிக்கும் விதத்தை கண்காணித்தல்,இசை கட்டுப்பாடு,ஸ்பாட்டிபை ஆதரவு,இலக்கை தழுவிய உடற்பயிற்சி மாதிரி, செயலி அறிவிப்பு மற்றும் உறக்கத்தை கண்காணித்தல் போன்ற அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. பயனருடைய வேகம் மற்றும் இடைவெளியை கண்டறிய ஜி.பி.ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓட்டம் மற்றும் மிதிவண்டி மிதித்தல்  போன்ற சமயங்களில் உபயோகமாக உள்ளது.பிட்பிட் செயலியை பயன்படுத்தி பயிற்சி வரைபடத்தை காணலாம். மேலும் ஆக்ட்டிவ் ஜோன் மினிட்ஸ்,ஒர்கவுட் இன்டென்சிட்டி மேப்ஸ்,ஹார்ட் ரேட் ஸோன்ஸ் மற்றும் ரெஸ்டிங் ஹார்ட் ரேட் போன்றவற்றை கண்காணிக்கும் அம்சங்களும் பிட்பிட்டில் இடம் பெற்றுள்ளன. அதோடு மேலும் ஆல் டே ஆக்ட்டிவிட்டி ட்ராக்கிங்,ஆட்டோமேட்டிக் எக்ஸர்சைஸ் ரிகாக்னிஷன் போன்ற அம்சங்களும் கூடுதல்.

பிட்பிட் சார்ஜ் 4  50m வாட்டர் ரெசிஸ்டென்ஸ் உடனும் பயனரின் நீச்சல் பண்புகளையும் அறியவும்  உதவுகிறது.ஆகையால்  செயற்கை மழைச் சாரலில் எவ்வித கவலையும் இன்றி நனையலாம். 7 நாட்கள் வரை செயல்படும் பேட்டரி திறன் பெற்றும், ஜி.பி.எஸ் எனேபில் செய்த பிறகு 5 நாள் வரை செயல்படும் பேட்டரி திறன் பெற்றும் உள்ளது.

பிட்பிட் சார்ஜ் 4 Rs.14, 999 க்கு பிளாக், ஸ்ட்ரோம் பிளாக், ஸ்ட்ரோம் ப்ளூ மற்றும் ரோஸ்வுட் வண்ணங்களில் விற்பனைக்கு வருகின்றன. மேலும் Rs.16, 999க்கு பிளாக் ஒவேன் மற்றும் க்ரானைட் ரெஃப்ளெக்ட்டிவ் போன்ற வண்ணங்களில் சிறப்பு வகைகளாக விற்பனைக்கு வருகின்றன. இந்த சிறப்பு பதிப்பு கூடுதலாக  பிளாக் ஸ்ட்ராப் உடன் விற்பனைக்கு வருகிறது. 90 நாட்களுக்கு இலவச பிரீமியம் மெம்பெர்ஷிப் கொண்டுள்ளது. பிட்பிட் சார்ஜ் 4ன் சிறப்பு ஜி.பி.ஸ் ட்ராக்கர் அம்சமாகும். சிறு மற்றும் பெரு பட்டையுடன் சந்தைக்கு வரும் பிட்பிட் சார்ஜ் 4 ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களில் இணக்கமாக இருக்கும் வகையில் உருவாக்கம் பெற்றுள்ளன.

மற்ற செய்திகளையும் படித்து பகிருங்கள்:

வை-பை (Wi-Fi) மூலம் இலவசமாக பேசுவது எப்படி?

யூ.பி.ஐ மூலமும் சந்தாவைச் செலுத்த அனுமதி வழங்கிய யூட்யூப்

எம் ஐ 10 யூத் (Mi 10 Youth 5G) : 5ஜி மற்றும் க்வாட்(Quad) கேமரா தொழிற்நுட்பத்தில் உருவாக்கம் பெற்ற ஸியோமீயின் புதிய ஸ்மார்ட் போன்

வாட்ஸாப்: குழும அழைப்பின் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு??

GST திருத்தத்திற்கு பின் Rs.20,000க்குள் கிடைக்கும் சிறப்பான 5 ஸ்மார்ட் போன்கள்

நிகழ்நிலை வீடியோ சந்திப்பிற்கு "ZOOM" செயலி பாதுகாப்பானதா? மாற்றுச் செயலி பாதுகாப்பானதா??

எந்தெந்த நிறுவனங்கள் COVID-19 பாதிப்பின் காரணமாக ஸ்மார்ட்போன்களின் வாரண்ட்டி நாட்களை நீட்டித்துள்ளன?

மோட்டோரோலா எட்ஜ்+ பிரீமியம் ஸ்மார்ட் போன்களுக்கு போட்டியாக இருக்குமா ?

ஒன்பிளஸ் 8 சீரிஸ்: ஒன்பிளஸ் தயாரிப்பில் அதன் தடத்தை இழந்துவிட்டதா?