COVID-19 சர்வேதேச பரவலால் உலகம் முழுவதும் முடங்கியுள்ளது. இந்நிலையில் பெரும்பான்மையான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து கொண்டே தங்கள் பணியினை செய்யலாம் என்று கூறி இருந்தது. இதன் காரணமாக இண்டர்நெட் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இணைய நுகர்வு அதிகமான நிலையில் மக்கள் நிலையான இண்டர்நெட் சேவையை எவ்வாறு பெறுவது என்று கண்டறிய ஆவலாக உள்ளனர். இப்பதிவில் நிலையான இண்டர்நெட் சேவையை பெற்றிட 5 வழிமுறைகளைக் காணலாம்.
1. உபயோகிக்காத கருவியில் வை-ஃபை யை ஆஃப் செய்யவும்
உபயோகிக்காத நிலையில் பல கருவிகள் வை-ஃபையுடன் இணைந்து இருப்பின் அதன் தொடர்பினை துண்டிக்கவும்.இவ்வாறு செய்வதால் வை-ஃபையின் வேகம் அதிகரிக்கிறது.
2. கம்பியின் (wired) வழியாக இண்டர்நெட் சேவையை பயன்படுத்தலாம்
அதிவேக இண்டர்நெட் சேவைக்கு பயனர் கம்பியின் வழியாக இண்டர்நெட் சேவையை மடிக்கணினி (laptop) அல்லது தொலைக்காட்சியுடன்(T.V) இணைத்து உபயோகிக்கலாம். நெகிழ்வுத்தன்மை (flexibility) குறைவாக இருப்பினும் இது இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்கிறது.
3. வை-ஃபை திசைவியை (Router) உகந்த இடத்தில் வைத்தல்
வை-பை திசைவியை மேசை அல்லது அலமாரி மீது வைத்தல் மற்றும் திசைவியின் குறுக்கே உபயோக பொருட்கள் அல்லது எலக்ட்ரானிக் பொருட்களை வைப்பதை தவிர்த்தல் போன்ற செயல்களால் இண்டர்நெட் வேகத்தை கூட்ட இயலும்.
4. வீடியோக்களின் ரிசொலுயுஷன் (Resolution) குறைத்தல்
நாம் வீடியோக்களை பார்க்கும் போது ரிசொலுயுஷன்-ஐ குறைத்து பார்ப்பதன் மூலம் இண்டர்நெட் பயன் குறைந்து அதன் வேகம் அதிகரிக்கிறது.
5. தேவையற்ற செயலிகளின் இயக்கத்தை நிறுத்துதல்
தேவையற்ற செயலிகள் இண்டர்நெட்டை பயன்படுத்திக் கொள்கிறது. இச்செயலிகளின் இயக்கத்தை நிறுத்துவதால் இண்டர்நெட் பயன்பாடு குறைகிறது. இதன் பொருட்டு இண்டர்நெட் வேகம் கூடுகிறது.
மேற்கண்ட 5 முறைகளை பின்பற்றுவதன் மூலம் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க இயலும்.
மற்ற செய்திகளையும் படித்து பகிருங்கள்:
பிட்பேண்டில் ஜி.பி.எஸ் ஆ? விற்பனைக்கு வருகிறது பிட்பிட் சார்ஜ் 4
வை-பை (Wi-Fi) மூலம் இலவசமாக பேசுவது எப்படி?
யூ.பி.ஐ மூலமும் சந்தாவைச் செலுத்த அனுமதி வழங்கிய யூட்யூப்
வாட்ஸாப்: குழும அழைப்பின் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு??
GST திருத்தத்திற்கு பின் Rs.20,000க்குள் கிடைக்கும் சிறப்பான 5 ஸ்மார்ட் போன்கள்
நிகழ்நிலை வீடியோ சந்திப்பிற்கு "ZOOM" செயலி பாதுகாப்பானதா? மாற்றுச் செயலி பாதுகாப்பானதா??
எந்தெந்த நிறுவனங்கள் COVID-19 பாதிப்பின் காரணமாக ஸ்மார்ட்போன்களின் வாரண்ட்டி நாட்களை நீட்டித்துள்ளன?
மோட்டோரோலா எட்ஜ்+ பிரீமியம் ஸ்மார்ட் போன்களுக்கு போட்டியாக இருக்குமா ?
ஒன்பிளஸ் 8 சீரிஸ்: ஒன்பிளஸ் தயாரிப்பில் அதன் தடத்தை இழந்துவிட்டதா?