கூகிள் லென்ஸ் கூகிள் நிறுவனத்தால் 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கூகிள் லென்ஸ் ஒரு பிரபலமான இமேஜ் ரிகாக்னிஷன் டெக்னாலஜி ஆகும். கூகிள் லென்ஸ் ஒரு தொகுக்கப்பட்ட அம்சமாகும் ( Integrated Feature), இது கூகிள் பிக்ஸல் ஸ்மார்ட் போன்களில் இருக்கிறது. மேலும் ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் போன்றவற்றில் இறக்கம் செய்துகொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் மைக்ரோசாப்ட் ஆபீஸ் ஆவணங்களை ஊடுகதிர் மற்றும் செயலாக்கம் செய்ய மிகவும் பயனுள்ள வகையில் உருவாக்கம் பெற்றுள்ளது.இந்த பதிவில் நாம் கூகிள் லென்ஸ் மற்றும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் லென்ஸ் இவ்விரண்டிலும் எது நம் பயன்பாட்டிற்கு பொருத்தமானது என்பதைக் காண்போம்.
மைக்ரோசாப்ட் லென்ஸ்
தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் ஆவணங்கள், வைட் போர்டு, ரிஸிப்ட்ஸ்,பிசினஸ் கார்ட்ஸ் மற்றும் நோட்ஸ் போன்றவற்றை ஊடுகதிர் செய்தல் மற்றும் சேமித்தல் போன்றவற்றிக்கு பயன்படுத்தப்படுகிறது.
ஆபீஸ் லென்ஸை பயன்படுத்தி வைட்போர்டு மற்றும் ஆவணங்களில் எழுத்துக்களை நேர்த்தியாக்கவும், மேம்படுத்தவும் இயலும். ஆபீஸ் லென்ஸை பயன்படுத்தி படங்களை வெர்ட், பி.டி.எப் மற்றும் பவர்பாயிண்ட் கோப்புகளாக மாற்றம் செய்யலாம்.பயனரைச் சார்ந்து இந்த கோப்புகள் ஒன்நோட்,ஒன்டிரைவ் மற்றும் லோக்கல் டிரைவ் போன்றவற்றில் பதிவேற்றம் செய்யலாம்.
ஆபீஸ் லென்ஸை பயன்படுத்தி பிசினஸ் கார்டை ஊடுகதிர் செய்து, பின்பு அதை நேரடியாக ஒன்நோட் டில் சேமிக்கலாம். மேலும் ஆவணங்கள் ஒன்நோட் மற்றும் ஒன்டிரைவில் சேமித்து பகிரப்படுகிறது. இதன் மூலம் ஊழியர்கள் அனைவரும் எளிமையாக கோப்புகளை பகிரலாம். இந்த செயலி விண்டோஸ், ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்டு போன்றவற்றில் பயன்படுத்தலாம்.
கூகிள் லென்ஸ்
கூகிள் லென்ஸ் பரவலாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் செயலி. ஸ்மார்ட் போனின் கேமரா திறந்த பிறகு கூகிள் லென்ஸ், காட்சிதிரையில் உள்ள பொருளைப் பற்றி தகவல்களை சேகரிக்க துவங்கிவிடுகிறது. கூகுளை படங்களில் உள்ள க்யூ.ஆர்.கோட், லேபிள், டெக்ஸ்ட் மற்றும் படங்கள்(image) போன்றவற்றை ஆராய்ந்து தகவல் சேகரிப்பு
சாத்தியமாகிறது. கூகிள் லென்ஸ் மொழி மாற்றம், விரும்பிய பொருட்களை தேடி ஆராய்தல், அருகாமையில் உள்ள இடங்களை ஆராய்தல் மேலும் மரங்கள் மற்றும் விலங்கினங்களை கண்டறிதல் போன்றவற்றை செயகிறது. கூகிள் லென்ஸ் ஒரு உணவகத்தின் மெனு கார்டை ஒளிபடும் வகையில் வைத்தால் போதும், மெனு கார்டில் உள்ள எழுத்துக்கள் ஒலியாக்கம் பெறுகின்றன. எதிர்காலத்தில் ரசீது மற்றும் டிப்ஸ் கொடுத்தல் போன்றவற்றை ஒலியாக்கம் செய்யும் வகையில் வடிவமைப்பு பெறும்.
கூகிள் லென்ஸ் மற்றும் மைக்ரோசாப்ட் லென்ஸ் இரண்டும் இரு வேறு வகையான மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளன. ஒரு பயனர் கோப்புகளை சேமிக்கவும், பகிரவும் மைக்ரோசாப்ட் லென்ஸ் பயன்படுகிறது மற்றும் கூகிள் லென்ஸ் பொருட்களின் ஆராய்விற்கு பயன்படுகிறது.
மற்ற செய்திகளையும் படித்து பகிருங்கள்:
வெயில் காலங்களில் ஸ்மார்ட் போன் சூடாவதை தவிர்க்க 10 வழிமுறைகள்
5ஜி தொழிற்நுட்பம் மற்றும் ஸ்னாப்டிராகன் செயலியில் உருவாக்கம் பெற்ற போகோ F2 ப்ரோ
கூகுள் மீனா vs பேஸ்புக் ப்ளெண்டர் - சாட்பாட் யுத்தம்
COVID-19 காலத்தில் புதிய அம்சங்களுடன் சந்தைக்கு வந்துள்ள அலெக்சா
எம்.ஐ 10 மாடலை 108MP க்வாட் கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 865 செயலியுடன் அறிமுகப்படுத்தியது ஸியோமி