ஒன்பிளஸ் 8 சீரிஸ்: ஒன்பிளஸ் தயாரிப்பில் அதன் தடத்தை இழந்துவிட்டதா?

by Srinivasan
2 minutes
ஒன்பிளஸ் 8 சீரிஸ்: ஒன்பிளஸ் தயாரிப்பில் அதன் தடத்தை இழந்துவிட்டதா?

COVID-19 எனும் வைரஸ் தொற்றால் அனைத்து மொபைல் launches நிகழ்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய மாடல்களை ஆன்லைனில் launch செய்துள்ளது. இம்மொபைல்கள் COVID-19 lockdown முடிந்த பிறகு 5ஜி தொழிற்நுட்பத்தில்  சந்தைக்கு வருகின்றன.

ஒன்பிளஸ் 8 ப்ரோ

ஒன்பிளஸ் 8 ப்ரோ மிகவும் கவரும் வகையில் உருவாக்கம் பெற்றுள்ளது. இது Flagship எனப்படும் முதன்மை நிலையைப்  பெற்றுள்ளது என்பது கூடுதல் சிறப்பு. இது 6.78"  QHD+ AMOLED  Display-வைக் கொண்டுள்ளது. இக்கருவியின்  புதுப்பிப்பு வீதம் 120 Hz ஆகும். Optical In display Finger Print Sensor எனும் தொழிற்நுட்பத்தால் அமைந்துள்ளது. Display Quality தேர்வில் A+ grade நிலையைப் பெற்றுள்ளது. Peak Brightness-ல்  1300 nites அளவு வரை பிரகாசத்தை-ஐ அளிக்கிறது.

OnePlus 8 Pro camera specifications

Snapdragon நிறுவனத்தின் flagship Processor என்று அழைக்கப்படும் Snapdragon 865 Processor ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 Pro மாடலில் பயன்படுத்தப் பட்டுள்ளது. Adreno 865 வகை GPU ஒன்பிளஸ் 8 Pro மாடலில் பயன்படுத்தப் பட்டுள்ளது. 

கேமரா திறன் Quad camera தொழிற்நுட்பத்தால் ஆனது. முதன்மை கேமரா 48MP திறன் கொண்டும், SONY IMX 689 Sensor மற்றும் aperture f/1.7 அளவீட்டையையும் கொண்டது.  இரண்டாம் நிலை கேமரா 48MP திறனுடன்  Sony IMX Ultrawide Sensor 586 மற்றும் 120 degree FOV கொண்டுள்ளது. மூன்றாவது கேமரா 3X telephoto lens தொழிற்நுட்பத்தில் செயல்படுவதுடன் 30X பெரிதாக்கும் திறன் கொண்டதும் ஆகும். இறுதி கேமரா 5MP colour filter திறன் கொண்டு செயல்படுகிறது. முதன்மை கேமரா 16MP திறனும், Sony IMX 471 Sensor கொண்டும் இயங்குகிறது.

பேட்டரி திறன் 4500mah அளவீடு ஆகும். Wrap Charge 30T தொழிற்நுட்பத்தால் அதீத வேகத்தில் மின்னாற்றல் சேமிக்கப்படுகிறது. வயர்லெஸ் தொழில்நுட்பம் மூலம் 30W திறன் அளவிற்கு ஆற்றல் சேமிக்கப்படுகிறது. கூடுதலாக stereo speakers, dolby atmos support போன்ற தொழிற்நுட்பத்தையும் கொண்டு ஒன்பிளஸ் 8 Pro செயல்படுகிறது.

ஒன்பிளஸ் 8

ஒன்பிளஸ் 8 Pro-வைப் போன்று ஒன்பிளஸ் 8 மாடலும் Snapdragon 865 Processor கொண்டு செயல்படுகிறது. ஒன்பிளஸ் 8  6.55" FHD+ AMOLED வகையான  display-ஐ கொண்டுள்ளது மற்றும் இதன் புதுப்பிப்பு வீதம் 90Hz  ஆகும்.

OnePlus 8

ஒன்பிளஸ் 8 மூன்று கேமரா கொண்டு செயல்படுகிறது. முதன்மை கேமரா 48MP திறன் மற்றும் Sony IMX 586 sonsor கொண்டுள்ளது.  இரண்டாம் நிலை கேமரா 16MP திறனும், ultra wide lens தொழிற்நுட்பமும், FOV 116 degree கொண்டும் செயல்படுகிறது. மூன்றாவது கேமரா 2MP macro sensor-ஐ கொண்டு இயங்கும் திறன் பெற்றது. ஒன்பிளஸ் 8 4300mah பேட்டரி திறன் கொண்டது. Wrap charge  30T தொழில்நுட்பம் மின்னாற்றல் விரைவில் சேமிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

Configuration and Pricing

ஒன்பிளஸ் 8 8GB, 12GB RAM variant என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. 8GB RAM 128GB ROM உடன் Rs.44, 999க்கு  விற்பனைக்கும்,  12GB RAM 256GB ROM உடன் Rs.49, 999க்கு விற்பனைக்கும் வருகிறது. Glacial Green,   Interstellar Glow, Onyx Black  வண்ணங்களில் ஒன்பிளஸ்  8 சீரிஸ் சந்தையில் கிடைக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் கூறியுள்ளது. அதோடு ஒன்பிளஸ் நிறுவனம்  ஒன்பிளஸ் 8-ல்   6GB RAM மற்றும் 128GB ROM  உடன் ஒரு மாடலை அமேசானில் பிரத்தியேகமாக Rs. 42, 999க்கு விற்பனைக்கு கொண்டு  வருகிறது. இது Glacial Green வண்ணத்தில் கிடைக்கும். ஒன்பிளஸ் 8 Pro 8GB variant Rs.54, 999க்கு விற்பனைக்கும், 12 GB variant Rs.59, 999க்கு விற்பனைக்கும் வருகிறது. Glacial Green,  Onyx Black, Ultramarine Blue போன்ற வண்ணங்களில் சந்தையில் கிடைக்கும். ஒன்பிளஸ் 8 series Online மற்றும் Offline இரண்டு விதமாகவும் சந்தைக்கு வருகிறது.