புதிய புரட்சியுடன் அறிமுகமாகும் ஒன் ப்ளஸ் நோர்ட்

by Mohan Ram
2 minutes
புதிய புரட்சியுடன் அறிமுகமாகும் ஒன் ப்ளஸ் நோர்ட்

ஜுலை 21 ஆம் தேதி இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சந்தைகளில் ஒன் பிளஸ் நோர்ட் அறிமுகப்படுத்தபடுகிறது. ஐரோப்பிய நாடுகளில் 500 டாலருக்கும், இந்தியாவில் அதைவிட அதிக விலையிலும் சந்தைக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

காட்சிப்பொருள் :

ஒன் பிளஸ் நோர்ட் 6.44" அளவீடு கொண்ட FHD+ ஃபுளூயிட் AMOLED வகை காட்சிப் பொருளை கொண்டுள்ளது.இதன் புதுப்பிப்பு வேகம் 90Hz அளவீடு ஆகும்.

செயலி :

ஒன் பிளஸ் நோர்ட் ஸ்மார்ட் ஃபோனில் நடுமதிப்பு மிக்க ஸ்னாப்ட்ராகன் 765ஜி செயலி 5ஜி தொழிற்நுட்பத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை பயன்படுத்திய முதல் ஸ்மார்ட் ஃபோன் என்ற பெருமையை ஒன் பிளஸ் நோர்ட் பெறுகிறது.

                                         

கேமிரா :

க்வாட் கேமிரா தொழல்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது ஒன் பிளஸ் நோர்ட். முதன்மை கேமிரா 48MP திறன் பெற்ற IMX 586 சென்சார் ஆகும்.இதனுடைய துவாரத்திறன் f/1.75 ஆகும். இரண்டாம்நிலை கேமிரா 8MP திறன் பெற்ற அல்ட்ரா வைட் லென்ஸ் ஆகும். இதனுடைய காட்சிப்புலன் திறன் 119° ஆகும். மூன்றாம்நிலை கேமிரா மற்றும் நான்காம்நிலை கேமிரா 5MP டெப்த் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகும். முன்னிலை கேமிரா 32MP ரெகுலர் ஷுட்டர் திறன் மற்றும் 8MP அல்ட்ரா வைட் லென்ஸ் கொண்டு செயல்படுகிறது.

                                         

மின்கலன் :

4115 mAh அளவீடு மின்னாற்றலை சேமிக்கும் திறன் பெற்று விளங்குகிறது. வ்ராப் சார்ஜ் 30T மின்னூட்ட வகை பயன்படுத்தப் பட்டுள்ளது.ஒன் பிளஸ் நோர்ட் 8GB & 128GB  மற்றும் 12GB & 256GB எனும் வகைகளாகச் சந்தைக்கு வருகிறது.

வண்ணங்கள் :

ப்ளு மார்பில், கிரே ஓனிக்ஸ், க்ரே ஆஷ் போன்ற வண்ணங்களில் சந்தைக்கு வருகின்றன. இந்திய மதிப்பில் ரூ.34,990க்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகளையும் படித்து பகிருங்கள்:

எம் ஐ நோட்புக் 14: கணினி துறையில் கால்தடம் பதிக்கிறது ஸியோமி நிறுவனம்

5ஜி தொழிற்நுட்பம் மற்றும் ஸ்னாப்டிராகன் செயலியில் உருவாக்கம் பெற்ற போகோ F2 ப்ரோ

கூகுள் மீனா vs பேஸ்புக் ப்ளெண்டர் - சாட்பாட் யுத்தம்

ஓப்போ A11K: மலிவுவிலையில் ஒரு தரமான ஓப்போ தயாரிப்பு

எம்.ஐ 10 மாடலை 108MP க்வாட் கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 865 செயலியுடன் அறிமுகப்படுத்தியது ஸியோமி

இந்தியாவில் $10 பில்லியன் முதலீடு செய்யும் கூகுள்