ஓப்போ A11K: மலிவுவிலையில் ஒரு தரமான ஓப்போ தயாரிப்பு

by Srinivasan
3 minutes
ஓப்போ A11K: மலிவுவிலையில் ஒரு தரமான ஓப்போ தயாரிப்பு

ஓப்போ நிறுவனம் அண்மையில் ஓப்போ A11 கே ஸ்மார்ட் ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. சைனா பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று முழக்கங்கள் வலம் வரும் நிலையில் ஓப்போ நிறுவனம் விலை மலிவான A11 கே ஸ்மார்ட் ஃபோனை சந்தைக்கு கொண்டு வந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

காட்சித்திரை மற்றும் வடிவமைப்பு

ஓப்போ A11 கே IPS LCD காட்சித்திரை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 155.9mm × 75.5mm ×  8.3mm அளவீடும் மற்றும் 165g எடையும் கொண்டுள்ளது. காட்சித்திரை 720 × 1520 பிக்ஸல் ரெசல்யூசன் மற்றும் 270 பி.பி.ஐ பிக்ஸல் டென்சிடி கொண்டுள்ளது. மேலும், புலன் விகிதம் 19:9 அளவும், திரைக்கும் உடலமைப்புக்கும் உள்ள விகிதம் 81.63%.

செயலி

ஓப்போ A11 கே ஸ்மார்ட் ஃபோனில் மீடியா டெக் ஹீலியோ P35 வகை செயலி பயன்படுத்தப் பட்டுள்ளது. மேலும் PowerVR GE8320 வகை ஜி.பி.யு பயன்படுத்தப் பட்டுள்ளது.

கேமரா

இது இரண்டு பின்கேமரா மற்றும் ஒரு செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. 

பின் கேமரா - முதன்மை கேமரா 13MP திறனும், f/2.2 அளவு துவாரத்துளையும் கொண்டுள்ளது. இரண்டாம்நிலை கேமரா 2MP டெப்த் சென்சார் மற்றும் f/2.4 அளவு துவாரத்திறனும் பெற்றுள்ளது.

செல்ஃபி கேமரா - 5MP திறனும் f/2.4  அளவு துவாரத்திறனும் பெற்றுள்ளது.

மின்கலம்

மின்கலன் நீக்க முடியாத வகையில் வடிவாக்கம் பெற்றுள்ளது. 4320mah அளவு மின்தேக்கும் திறன் கொண்டுள்ளது, மேலும் மின்னூட்டதிறன் 10W ஆகும்.

உள்ளமைவு மற்றும் விலை

டீப் ப்ளூ மற்றும் ஃப்ளோவிங் சில்வர் வண்ணங்களில் சந்தைக்கு ரூ.8990க்கு வருகிறது. 2GB RAM மற்றும் 32GB ROM கொண்டு சந்தைக்கு வருகிறது.

மற்ற செய்திகளையும் படித்து பகிருங்கள்:

எம் ஐ நோட்புக் 14: கணினி துறையில் கால்தடம் பதிக்கிறது ஸியோமி நிறுவனம்

5ஜி தொழிற்நுட்பம் மற்றும் ஸ்னாப்டிராகன் செயலியில் உருவாக்கம் பெற்ற போகோ F2 ப்ரோ

கூகுள் மீனா vs பேஸ்புக் ப்ளெண்டர் - சாட்பாட் யுத்தம்

COVID-19 காலத்தில் புதிய அம்சங்களுடன் சந்தைக்கு வந்துள்ள அலெக்சா

எம்.ஐ 10 மாடலை 108MP க்வாட் கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 865 செயலியுடன் அறிமுகப்படுத்தியது ஸியோமி

ட்விட்டர் 24 மணிநேரத்தில் மறையும் ஃபிளிட்ஸ் அம்சத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது