2018-ல் சியோமி நிறுவனம் போகோ எனும் புதிய அடையாளத்தை உருவாக்கி, முதன்முதலில் போகோ F1 ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, ஒன்பிளஸ் நிறுவனம் எவ்வாறு ஒன்பிளஸ் 1 ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தி சந்தையில் எப்பிம்பத்தை உருவாக்கியதோ அதே பிம்பத்தை போகோ F1 உருவாக்கியது. இந்தியச் சந்தையில் வெற்றியை அடைந்தப்பின் ஐரோப்பிய நாடுகளின் சந்தைகளிலும் வெற்றியை பெற்றது. ஐரோப்பிய சந்தைகளில் அதிகபட்சமாக $300-க்கு விற்கப்பட்டது.
போகோ F1-ற்கு பின்பு 18 மாதங்கள் கழித்து அந்நிறுவனம் போகோ F2 ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்துகிறது. எப்போதும் இல்லாத அளவிற்கு போகோ பின்பற்றாளர்கள் போகோ F2வின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். போகோ F2 எவ்வாறு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை அறிய பயனாளர்கள் ஆவலுடன் உள்ளனர்.
போகோ F2 6.67" FHD+ AMOLED வகைக் காட்சிக் கருவியை கொண்டது. HDR 10+ அம்சத்தை அதிரிக்கிறது போகோ F2. போகோ F2 ஸ்மார்ட் போன் சாண்ட்விச் வடிவமைப்பு கொண்டு கண்ணாடியால் செய்யப்பட்டது. மேலும் அலுமினிய சட்டகத்தை கொண்டுள்ளது. காட்சிப் பொருள் பாதுகாப்பிற்கு கொரில்லா கிளாஸ் 5 பயன்படுத்தப் பட்டுள்ளது.
போகோ F2 5ஜி தொழிற்நுட்பத்தை தழுவியது. ஸ்னாப்ட்ரகனின் முதன்மை செயலியான 865 மற்றும் அட்ரீனோ 650 வகை GPU பயன்படுத்தப் பட்டுள்ளது.
போகோ F2 க்வாட் கேமரா திறன் பெற்றது. முதன்மை கேமரா 64MP திறன் பெற்ற சோனி IMX 686 சென்சாரையும் துவாரத் திறன் f/1.9 அளவீடு பெற்றும் செயல்படுகிறது.
இரண்டாம் கேமரா 13MP அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 113 டிகிரி அளவு காட்சித் திறன் பெற்றும் செயல்படுகிறது. மூன்றாம் மற்றும் நான்காம் நிலை கேமரா 5MP டெலிமேக்ரோ லென்ஸ் மற்றும் 2MP டெப்த் சென்சாரையும் கொண்டுள்ளது. முன் கேமரா பாப்-அப் தொழிற்நுட்பத்தில் செயலாற்றுகிறது.
30W அதிவேக மின்னூட்டம் மற்றும் 4700mah அளவீடு மின்னாற்றல் சேமிக்கும் திறன் கொண்டும் போகோ F2 செயல்படுகிறது. ஆண்ட்ராய்டு 10 மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. யூசர் இன்டர்பேஸிற்கு MIUI 11 பயன்படுத்தப்பட்டுள்ளது. 6GB RAM மற்றும் 128GB ROM என்றும் 8GB RAM மற்றும் 256GB ROM வகையில் சந்தைக்கு வருகிறது. சந்தைக்கு €499 மற்றும் €599 ஆகிய விலையில் வருகிறன்றன. நியான் ப்ளூ (Neon Blue), பான்டோம் வைட் (Phantom White), எலெக்ர்ட்ரிக் பர்ப்பில் (Electric Purple),சைபர் கிரெ (Cyber Gray) போன்ற வண்ணங்களில் விற்பனைக்கு வருகின்றன. இந்திய சந்தையில் என்ன விலைக்கு விற்பனைக்கு வருகின்றன எனும் அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
மற்ற செய்திகளையும் படித்து பகிருங்கள்:
கூகுள் மீனா vs பேஸ்புக் ப்ளெண்டர் - சாட்பாட் யுத்தம்
COVID-19 காலத்தில் புதிய அம்சங்களுடன் சந்தைக்கு வந்துள்ள அலெக்சா
எம்.ஐ 10 மாடலை 108MP க்வாட் கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 865 செயலியுடன் அறிமுகப்படுத்தியது ஸியோமி
டெஸ்க்டாப்பில் புதுப்பிப்பு கொண்டு வந்துள்ள பேஸ்புக்
சர்வதேச முடக்குதல் காலத்தில் இண்டர்நெட் இணைப்பை வேகமாக்கும் 5 எளிய முறைகள்
பிட்பேண்டில் ஜி.பி.எஸ் ஆ? விற்பனைக்கு வருகிறது பிட்பிட் சார்ஜ் 4
வை-பை (Wi-Fi) மூலம் இலவசமாக பேசுவது எப்படி?
யூ.பி.ஐ மூலமும் சந்தாவைச் செலுத்த அனுமதி வழங்கிய யூட்யூப்
வாட்ஸாப்: குழும அழைப்பின் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு??
GST திருத்தத்திற்கு பின் Rs.20,000க்குள் கிடைக்கும் சிறப்பான 5 ஸ்மார்ட் போன்கள்
நிகழ்நிலை வீடியோ சந்திப்பிற்கு "ZOOM" செயலி பாதுகாப்பானதா? மாற்றுச் செயலி பாதுகாப்பானதா??
எந்தெந்த நிறுவனங்கள் COVID-19 பாதிப்பின் காரணமாக ஸ்மார்ட்போன்களின் வாரண்ட்டி நாட்களை நீட்டித்துள்ளன?
மோட்டோரோலா எட்ஜ்+ பிரீமியம் ஸ்மார்ட் போன்களுக்கு போட்டியாக இருக்குமா ?
ஒன்பிளஸ் 8 சீரிஸ்: ஒன்பிளஸ் தயாரிப்பில் அதன் தடத்தை இழந்துவிட்டதா?