ரியல்மீ நிறுவனம் ரியல்மீ எக்ஸ் சீரியஸில் ஸ்மார்ட் போன்களை, ரியல்மீ பட்ஸ் Q மற்றும் ரியல்மீ பேக்பேக்(Backpack) அவற்றுடன் சேர்த்து அறிமுகம் செய்துள்ளது. இந்த அறிமுக நிகழ்ச்சியில் நட்சத்திரமாக மின்னுவது, 60X அளவு ஜூம் செய்யும் திறன் வாய்ந்தது ரியல்மீ எக்ஸ் 3 சூப்பர் ஜூம்.
ரியல்மீ எக்ஸ் சீரியஸ்
ரியல்மீ நிறுவனம் ரியல்மீ எக்ஸ் 3 சூப்பர் ஜூம் மற்றும் ரியல்மீ எக்ஸ் 3 என்ற, இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரியல்மீ எக்ஸ் 3 சூப்பர் ஜூம் பற்றி முதலில் காண்போம். இது 6.6" FHD + LCD காட்சித்திரை மற்றும் 120Hz புதுப்பிப்பு வேகத்தை கொண்டுள்ளது.காட்சித்திரை கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கவசத்தை கொண்டுள்ளது. ஸ்னாப்ட்ராகனின் முதன்கை செயலியான ஸ்னாப்ட்ராகன் 855 ப்ளஸ் பயன்படுத்தப் பட்டுள்ளது. அட்ரீனோ 640 ஜி.பி.யு பயன்படுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
ரியல்மீ எக்ஸ் சூப்பர் ஜீம் ஸ்மார்ட் போன் கேமிரா துறையில் சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. குவாட் கேமிரா திறன் கொண்டு செயல்படுகிறது. முதன்மை கேமிரா 64MP பிடிப்புத்திறனும் f/1.8 துவாரத்திறனும் பெற்றுள்ளது. இரண்டாம்நிலை கேமிரா 8MP அல்ட்ரா வைட் லென்ஸ், f/2.3 துவாரத்திறன் மற்றும் 119 டிகிரி காட்சிப்புலன் திறனும் கொண்டுள்ளது. மூன்றாம்நிலை கேமிரா 8MP பெரிஸ்கோப் லென்ஸ் மற்றும் f/3.4 துவாரத்திறனும் பெற்றுள்ளது. மேலும் 5X ஆப்டிகல் ஜூம் மற்றும் 60X டிஜிட்டல் ஜூம் திறனும் கொண்டுள்ளது.நான்காம் நிலை கேமிரா 2MP மேக்ரோ லென்ஸ் கொண்டு செயல்படுகிறது. முன் கேமிரா 32MP திறனும் 8MP அல்ட்ரா வைட் லென்ஸ் கொண்டும் செயல்படுகிறது.
ரியல்மீ எக்ஸ் 3 சூப்பர் ஜூம் 4200mah மின்கலனும், 30W டார்ட் மின்னாட்ட திறனும் கொண்டுள்ளது. சைட் மொவுன்டட் பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் பேஸ் அன்லாக் தொழிற்நுட்பத்தை கொண்டுள்ளது.
ரியல்மீ எக்ஸ் 3, ரியல்மீ எக்ஸ் 3 சூப்பர் ஜூம் போன்று அம்சங்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 8MP பெரிஸ்கோப் லென்ஸிற்கு பதிலாக 12MP டெலஸ்கோப் லென்ஸ் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது 2X ஆப்டிகல் ஜும் திறன் கொண்டுள்ளது. முன் கேமிரா 32MP பதிலாக 16MP பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட் போன்களும் குறைந்த ஒளியில் படம் பிடிக்க நைட்ஸ்கேப் 4.0 தொழிற்நுட்பத்தையும், ஸ்டார்ரி நைட் அம்சத்தை கொண்டு பிவுடிஃபுல் காஸ்மோஸ் ஸிமிலர் படம் பிடிக்கும் தொழிற்நுட்பத்தையும் கொண்டுள்ளது.
உள்ளமைவு மற்றும் விலை
ரியல்மீ எக்ஸ்3 சூப்பர் ஜூம் இரண்டு விதங்களில் சந்தைக்கு வருகிறது. 8GB RAM + 128GB வகை 27,999 ரூபாய்க்கும் , 12GB RAM மற்றும் 256GB வகை 32,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வருகின்றன.
ரியல்மீ எக்ஸ்3 6GB RAM + 128GB ROM 24,999 ரூபாய்க்கும் ரியல்மீ எக்ஸ்3 8GB RAM + 128GB ROM 25,999 ரூபாய்க்கும் சந்தைக்கு வருகின்றன.
இரண்டு ஸ்மார்ட் போன்களும் DDR4X வகை RAM மற்றும் டேடா சேமிப்பிற்க்கு யூ.எஃப். எஸ் 3.0.தொழிற்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 10 ஓ.எஸ் மற்றும் ரியல்மீ யூ.ஐ கொண்டு செயல்படுகிறது. கிளேசியர் ப்ளு மற்றும் ஆர்க்டிக் வைட் வண்ணங்களில் சந்தைக்கு வருகின்றன.
ரியல்மீ பட்ஸ் Q ரியல்மீ அட்வன்சரர் பேக்பேக்
ரியல்மீ எக்ஸ் சீரியஸிடன் ரியல்மீ பட்ஸ் Q TWS 1,999 ரூபாய்க்கு சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. பட்ஸ் Q 10mm ட்ரைவர் கொண்டுள்ளது. மின்னூட்டம் செய்யும் முன் 5 மணி நேரமும், மின்னூட்டம் செய்த பின்பு 20 மணி நேரமும் உழைக்கிறது.
பட்ஸ் ஒவ்வொன்றும் 3.6 கிராம் நிறை கொண்டுள்ளது. வெள்ளை,மஞ்சள் மற்றும் கருப்பு வண்ணங்களில் விற்பனைக்கு வருகின்றன.
ரியல்மீயிடம் இருந்து, 32 லிட்டர் அளவீடு கொண்ட பேக்பேக் ரூ.1499க்கு சந்தைக்கு கருப்பு வண்ணத்தில் வருகிறது. பட்ஸ் Q மற்றும் பேக்பேக் இவை இரண்டும் IPX4 வாட்டர் ரெஸிஸ்டென்ட் அம்சத்தை கொண்டுள்ளது.
மற்ற செய்திகளையும் படித்து பகிருங்கள்:
எம் ஐ நோட்புக் 14: கணினி துறையில் கால்தடம் பதிக்கிறது ஸியோமி நிறுவனம்
5ஜி தொழிற்நுட்பம் மற்றும் ஸ்னாப்டிராகன் செயலியில் உருவாக்கம் பெற்ற போகோ F2 ப்ரோ
கூகுள் மீனா vs பேஸ்புக் ப்ளெண்டர் - சாட்பாட் யுத்தம்
ஓப்போ A11K: மலிவுவிலையில் ஒரு தரமான ஓப்போ தயாரிப்பு
எம்.ஐ 10 மாடலை 108MP க்வாட் கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 865 செயலியுடன் அறிமுகப்படுத்தியது ஸியோமி
ட்விட்டர் 24 மணிநேரத்தில் மறையும் ஃபிளிட்ஸ் அம்சத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது