ரெட்மி நோட் 9 ப்ரோ வரிசையில் அடுத்த படைப்பாக ரெட்மி நோட் 9

by Srinivasan
2 minutes
ரெட்மி நோட் 9 ப்ரோ வரிசையில் அடுத்த படைப்பாக  ரெட்மி நோட் 9

ரெட்மி நிறுவனம் நோட் 9 வரிசையில் தனது  அடுத்த படைப்பாக ரெட்மி நோட் 9 எனும் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தனது சகோதர ஸ்மார்ட் போனைப்போன்ற வடிவமைப்பு மற்றும் கேமரா தொழிற்நுட்பத்தைக் கொண்டுள்ளது. ரெட்மி நோட் 9 ஸ்மார்ட் போன் என்னென்ன அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது என்பதைக் காண்போம்.

காட்சித்திரை :- 

 ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்  பொலிவான கண்ணாடி புறஅமைப்பைக்  கொண்டது. காட்சித்திரை 6.53"  FHD+ LCD வகை திரையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திரை தனது பாதுகாப்பிற்கு கொரில்லா கிளாஸ் 5 வகை பெட்டியை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது அதிகபட்சமாக 450 நிட்ஸ் பிரகாச அளவீட்டை கொண்டதோடு, ஸ்மார்ட் போனின் உடலுக்கும், காட்சித்திரைக்கும் உள்ள விகிதத்தை 91.4% கொண்டுள்ளது.

                                             

செயலி :-

ரெட்மி நோட் 9  ஹெலியோ  G-85 வகை செயலியைக் கொண்டு செயல்படுகிறது. வரைகலை செயலாக்க அலகாக மாலி G-52 பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கேமரா :- 

 இதில் நாற்கட்டம் கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது . முதல் கேமரா 48 மெகா பிக்சல் சென்சார் மற்றும் f/1.79 துவாரத்திறனும் கொண்டது. இரண்டாம் கேமரா 8 மெகா பிக்ஸல் அல்ட்ரா வைட் லென்ஸும்,  f/2.2 துவாரத்திறனும்  மற்றும் 119 டிகிரி காட்சிப்புலன் திறனும் கொண்டது. மூன்றாம் கேமரா 2 மெகா பிக்சல் மேக்ரோ லென்ஸையும், நான்காம் கேமரா 2 மெகா பிக்சல் டெப்த் சென்சாரையும் கொண்டுள்ளது.

 காட்சித்திரையின் இடது மூலையில் சிறிய துவாரத்தில் 13 மெகா பிக்சல் திறன் கொண்ட முன் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

மின்கலன் :-

 ரெட்மி நோட் 9 5020 mAh வரை மின்னாற்றலை சேமிக்கும் இயல்பை பெற்றுள்ளது. மின்னூட்டம் செய்வதற்கு சி-வகை சார்ஜ்ர் பயன்படுத்தப் பட்டுள்ளது. குறிப்பாக, 22.5 W திறன் கொண்ட அதிவேக சார்ஜ்ரை கொண்டுள்ளது ரெட்மி நோட் 9. 

                                           

இணைப்பு :-

 இந்த ஸ்மார்ட் போன்  இரண்டு 4ஜி  சிம் கார்டுகள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் 5.0, வோவைபை, 2.4/5GHz வைபை போன்ற அம்சங்களை ரெட்மி  நோட் 9 ஸ்மார்ட்போனில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மென்பொருள் :-

 MIUI 11 எனும் பயனர் இடைமுகத்தின் வழியாக ரெட்மி நோட் 9 பயன்படுத்த இயலும். மேலும் ஆண்ட்ராய்டு 10 எனும்  ஒபெரடிங் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது . இந்த கருவி ரீர் மௌண்ட்ட் பிங்கர் பிரிண்ட் மற்றும் முகத்திறவு தொழிற்நுட்பத்தை கொண்டுள்ளது குறிப்பிடத்த்தக்கது.

உள்ளமைவு,விலை & வண்ணம் :-

 4GB+64GB, 4GB+128GB மற்றும்  6GB+128GB போன்ற அமைப்பில் முறையே Rs.11,999, Rs.13,499 மற்றும்  Rs.14,999 விலைக்கு ஆர்டிக் வைட் , அக்குவா க்ரீன் மற்றும் பெப்பில் கிரே போன்ற வண்ணங்களில் சந்தைக்கு வந்துள்ளது.

மற்ற செய்திகளையும் படித்து பகிருங்கள்:

எம் ஐ நோட்புக் 14: கணினி துறையில் கால்தடம் பதிக்கிறது ஸியோமி நிறுவனம்

5ஜி தொழிற்நுட்பம் மற்றும் ஸ்னாப்டிராகன் செயலியில் உருவாக்கம் பெற்ற போகோ F2 ப்ரோ

கூகுள் மீனா vs பேஸ்புக் ப்ளெண்டர் - சாட்பாட் யுத்தம்

ஓப்போ A11K: மலிவுவிலையில் ஒரு தரமான ஓப்போ தயாரிப்பு

எம்.ஐ 10 மாடலை 108MP க்வாட் கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 865 செயலியுடன் அறிமுகப்படுத்தியது ஸியோமி

இந்தியாவில் $10 பில்லியன் முதலீடு செய்யும் கூகுள்