M சீரியசில் வெளியாகும் சாம்சங்கின் அடுத்த ஸ்மார்ட்போன்

by Srinivasan
3 minutes
M  சீரியசில் வெளியாகும் சாம்சங்கின் அடுத்த ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் தனது முதல்  M வரிசை ஸ்மார்ட் போனை  2019 பிப்ரவரி மாதத்தில் அறிமுகப் படுத்தியது. M வரிசையில் பல்வேறு ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியுள்ள சாம்சங்,  தனது அடுத்த ஸ்மார்ட்போனாக சாம்சங் M31S-ஐ வருகின்ற   ஜூலை 30-ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் சுமந்து வரும் அம்சங்களைப் பற்றி காண்போம்.

காட்சித்திரை :-

சாம்சங்  M31S FHD+sAMOLED மற்றும் இன்பினிட்டி-ஓ  வகை காட்சித்திரை கொண்டிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

                                       

செயலி :- 

எக்சினோஸ் 9611 SoC எனும் செயலி பயன்படுத்தப்பட்டிருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது. 

கேமரா :-

இது நாற்கட்டம் கேமரா அமைப்பினைக் கொண்டது . இதன் கேமராக்கள் L வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கும் . முதன்மை கேமரா 64 மெகா பிக்சல் திறன் கொண்டது. இரண்டாம்,மூன்றாம்  மற்றும் நான்காம் நிலை கேமராக்கள் முறையே 8,5,5 மெகா பிக்சல் திறன் பெற்றிருக்கும்.

மின்கலன் :-

M31  ஸ்மார்ட் போனைப் போன்று 6000mAh  அளவு மின்கலன் திறன் பெற்றிருக்கும். இது மேலும் 25W  அதிவேக மின்னூட்ட திறன் பெற்றுள்ளது. திருப்பு மின்னூட்ட திறனும் பெற்று M31S விளங்குகிறது.

மென்பொருள் :-

ஆண்ட்ராய்டு 10 ஒபெரடிங் சிஸ்டம் பயன்படுத்தப் பட்டிருக்கும்.ரீர் பிங்கர் பிரிண்ட் சென்சாருக்கு பதிலாக இன்-டிஸ்பிலே பிங்கர் பிரிண்ட் சென்சார் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

                                         

உள்ளமைவு மற்றும் விலை :-

6GB/64GB மற்றும் 6GB/128GB எனும் உள்ளமைப்பில் தோராயமாக INR 20,000-க்குச்  சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகளையும் படித்து பகிருங்கள்:

எம் ஐ நோட்புக் 14: கணினி துறையில் கால்தடம் பதிக்கிறது ஸியோமி நிறுவனம்

5ஜி தொழிற்நுட்பம் மற்றும் ஸ்னாப்டிராகன் செயலியில் உருவாக்கம் பெற்ற போகோ F2 ப்ரோ

கூகுள் மீனா vs பேஸ்புக் ப்ளெண்டர் - சாட்பாட் யுத்தம்

ஓப்போ A11K: மலிவுவிலையில் ஒரு தரமான ஓப்போ தயாரிப்பு

எம்.ஐ 10 மாடலை 108MP க்வாட் கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 865 செயலியுடன் அறிமுகப்படுத்தியது ஸியோமி

இந்தியாவில் $10 பில்லியன் முதலீடு செய்யும் கூகுள்