நிகழ்நிலை வீடியோ சந்திப்பிற்கு "ZOOM" செயலி பாதுகாப்பானதா? மாற்றுச் செயலி பாதுகாப்பானதா??

by Srinivasan
2 minutes
நிகழ்நிலை வீடியோ சந்திப்பிற்கு "ZOOM" செயலி பாதுகாப்பானதா? மாற்றுச் செயலி பாதுகாப்பானதா??

COVID-19 தற்போது சர்வதேச அளவில் பரவியுள்ள நிலையில் அனைத்து நிறுவனங்களும் தமது ஊழியர்களை வீட்டிலிருந்து பணிகளை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. வீட்டிலிருந்து கொண்டே பணியின் திட்டங்களை ஆலோசிப்பதிற்கு "ZOOM" எனும் செயலியை அநேக நிறுவனங்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றன.

இந்த "ZOOM" செயலி கடந்த சில நாட்களில்  அதிகமாக "Playstore"-லிருந்து இறக்கம் பெற்ற செயலியாகும். இந்த செயலி துணைகொண்டு ஒளி மற்றும் ஒலி வடிவில் சந்திப்புகளை மேற்கொள்ளலாம்.

இந்நிலையில் "ZOOM" நிறுவனம் சில நெருக்கடிகளுக்கு உள்ளானது. பயனர்களின் தகவல்கள் பாதுகாப்பற்று இருப்பதாகவும், அதற்காக அந்நிறுவனம் தற்போது அப்பிழையை சரி செய்து கொண்டு இருப்பதாகவும் அரசு கூறியுள்ளது.

"ZOOM" செயலிக்கு மாற்றாக தனியுரிமை தகவல்களை சிறப்பாக பாதுகாக்கும் செயலிகள் மூன்று இங்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

Skype

"Zoom" செயலிக்கு மிகச் சிறந்த  மாற்றுச் செயலியாக "skype" அமைந்துள்ளது. எந்த ஒரு தனிநபர் விவரத்தையும் பதிவு செய்யாமல் "Skype" செயலி மூலம் 50 ஊழியர்கள் ஓர் சந்திப்பில் இணைய இயலும். இச்செயலி இலவசமாக கிடைப்பதுடன் இறக்கம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

"Skype" செயலியின் மூலம் கலந்துரையாடல்களை பதிவு செய்ய இயலும். திரையை பகிர்ந்து கொள்வதோடு  திரையின் பின் பிம்பத்தை தெளிவற்றதாகச் செய்யமுடியும். தொகுப்பாளர்  இணைப்பை உருவாக்கி சந்திப்பை நிகழ்த்தலாம், பயனர் இணைப்பை அழுத்தி சந்திப்பில் பங்கு கொள்ளவும் முடியும்.

skype

மைக்ரோசாப்ட் குழு

நீங்கள் மைக்ரோசாப்ட் office பயன்பாடுகளின் (like Word, PowerPoint, and Excel, etc.,) பயனர் எனில் மைக்ரோசாப்ட் செயலி மூலம் சந்திப்புகளை நிகழ்த்தலாம். மைக்ரோசாப்ட் குழுவை பயன்படுத்தி ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 10000 பயனியர்கள்  பங்கு கொள்ள முடியும் . நீங்கள் மைக்ரோசாப்ட் 365 சந்தாதார் எனில் மைக்ரோசாப்ட் ஆபீசுடனும் ஒத்துழைப்பு கொள்பது எளிது. நீங்கள்  மைக்ரோசாப்ட் 365 சந்தாதார் இல்லை எனில் கவலை கொள்ள வேண்டாம், தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் COVID-19 முடக்குதலைக் கொண்டு  இலவசமாக செயலியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

இந்த இலவச திட்டத்தின் மூலம் குறுஞ்செய்தி பரிமாற்றம்  மற்றும் வீடியோ அழைப்பு தனி நபருடனோ  இல்லை குழுவுடனோ செய்ய  இயலும்.

இலவச திட்டத்தில் தனி பயனாளர் அதிகபட்சமாக 2GB வரை தகவல்களை சேகரிக்கலாம் மற்றும் குழு அதிகபட்சமாக 10GB வரை தகவல்களை சேகரிக்கலாம்.

அதிக எண்ணக்கையில் நிகழும் ஊழியர் சந்திப்பிற்கு மைக்ரோசாப்ட் குழு மிகச் சிறந்த செயலியாகும்.

Microsoft teams

சிஸ்கோ வெபெக்ஸ் சந்திப்பு

இச்செயலியின் மூலம் வீடியோ அழைப்புகளை 100 நபருடன் நிகழ்த்த முடியும். தற்போது COVID-19 முடக்குதலால் இச்செயலியை இலவசமாக எந்தவித நேர கட்டுப்பாடுகள் இல்லாமல் பயன்படுத்திக்கொள்ள அந்நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. தொகுப்பாளர் இணைப்பை உருவாக்கி சந்திப்பு நிகழ்வை ஏற்படுத்த முடியும், மற்றொரு பயனர் அந்த இணைப்பை பயன்படுத்தி சந்திப்பு நிகழ்வில் பங்கு கொள்ளலாம். இச்செயலி மூலம் திரை பகிர்வு செய்து கொள்ள முடியும். நிகழ்நிலை வகுப்புகள் மற்றும் தொலைநிலை ஆதரவுகளை இச்செயலி மூலம் நிகழ்த்தலாம். சிஸ்கோ செயலி  "ZOOM" செயலியை விட மிகச் சிறந்த பாதுகாப்பான செயலியாகும்.

Cisco webex

கூகிள் ஹாங்கவுட் (COVID-19 முடக்குதலைக் கொண்டு  இலவசமாகக் கிடைக்கிறது), டிஸ்கார்ட் மற்றும் சோஹோ சந்திப்பு போன்ற கட்டண  செயலிகளைக் கொண்டும் பாதுகாப்பான நிகழ் சந்திப்புகளை நிகழ்த்திக் கொள்ளலாம்.