ட்விட்டர் இந்தியா ஃபிளிட்ஸ் எனும் அம்சத்தை தற்போது சோதனை செய்து வந்துள்ளது. இன்ஸ்டாகிராம் ஸ்டோரி போன்று 24 மணி நேரத்தில் மறைந்து போகும் அம்சத்தை சோதனை செய்து வருகிறது ட்விட்டர் இந்தியா. இத்தாலி மற்றும் பிரேசில் நாடுகளில் மார்ச் 2020லிருந்து பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்தியாவில் ட்விட்டரின் சந்தை நிலையை கைப்பற்றும் பொருட்டு இந்த அம்சத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளது ட்விட்டர் இந்தியா.
Testing, testing…
— Twitter India (@TwitterIndia) June 9, 2020
We’re testing a way for you to think out loud without the Likes, Retweets, or replies, called Fleets! Best part? They disappear after 24 hours. pic.twitter.com/r14VWUoF6p
ட்விட்டர் ஃபிளிட்ஸ் 24மணி நேரத்தில் மறைந்து போகும் சிறப்பு அம்சத்தை கொண்டது. இதன் மூலம் ஒருவர் தனது தினசரி கருத்துக்களை பகிரலாம். இந்த ஃபிளிட்ஸ் அம்சத்தின் மூலம் இமேஜ்,ஜிஃப் பைல், வீடியோ போன்றவற்றை பகிரலாம்.
ஃபிளிட்ஸை போஸ்ட் செய்ய மேல் வலது புறத்திலுள்ள ப்ரொபைல் பிக்சரை அழுத்த வேண்டும். பயனர் லைக்,ரீட்விட்,ரிப்ளே மற்றும் ஷேர் செய்ய இயலாது. உங்கள் DM திறந்த நிலையில் இருப்பின் யார் வேண்டுமாயின் உங்களுக்கு ரிப்ளே செய்யலாம். DM ஒருவேளை மூடி இருப்பின் உங்கள் அக்கவுண்ட்டை பின்பற்றுபவர்கள் ரிப்ளே செய்யலாம்.பயனர் மேலும் யார் யார் ஃபிளிட்ஸ் ஸ்டேடஸை பார்த்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ளலாம். உங்கள் ப்ரொபைல் திறந்து இருப்பின் எந்த பயனர் வேண்டுமாயினும் அவர் டைம் லைனில் ஃபிளிட்ஸை காணலாம். பயனரின் அக்கவுண்ட் பாதுகாக்கபடின் பயனிரை பின்பற்றுபவர்கள் மட்டுமே பார்க்க இயலும்.
ஃபிளிட்ஸ் மூலம் அடுத்தவர் எண்ணங்களை பொருட்படுத்தாமல் தங்களது கருத்துக்களை பகிரலாம். இந்த அம்சம் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன்களில் பயன்படுத்தி கொள்ளும் வகையில் உள்ளது. மேலும் இந்த அம்சத்தை பற்றிய பின்னூட்டத்தை(#FleetsFeedback) ட்விட்டரில் பகிர தனது பயனர்களை கேட்டுள்ளது. பயனர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த ஃபிளிட்ஸ் அம்சத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மற்ற செய்திகளையும் படித்து பகிருங்கள்:
வெயில் காலங்களில் ஸ்மார்ட் போன் சூடாவதை தவிர்க்க 10 வழிமுறைகள்
5ஜி தொழிற்நுட்பம் மற்றும் ஸ்னாப்டிராகன் செயலியில் உருவாக்கம் பெற்ற போகோ F2 ப்ரோ
கூகுள் மீனா vs பேஸ்புக் ப்ளெண்டர் - சாட்பாட் யுத்தம்
COVID-19 காலத்தில் புதிய அம்சங்களுடன் சந்தைக்கு வந்துள்ள அலெக்சா
எம்.ஐ 10 மாடலை 108MP க்வாட் கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 865 செயலியுடன் அறிமுகப்படுத்தியது ஸியோமி
கூகிள் லென்ஸ் vs மைக்ரோசாப்ட் ஆபீஸ் லென்ஸ்: உங்கள் ஸ்மார்ட் போனிற்கு எது மிகவும் பொருத்தமானது