யூ.பி.ஐ மூலமும் சந்தாவைச் செலுத்த அனுமதி வழங்கிய யூட்யூப்

by Srinivasan
~1 minute
யூ.பி.ஐ மூலமும் சந்தாவைச் செலுத்த அனுமதி வழங்கிய யூட்யூப்

உலகில் அதிகமாக வீடியோக்களை பகிரும் செயலியின்  வரிசையில் யூட்யூப் முதல் இடத்தில் உள்ளது. அந்நிறுவனம் தற்போது யூட்யூப் மியூசிக் மற்றும் யூட்யூப் பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷனுக்கு யூ.பி.ஐ தொழிற்நுட்பத்தை தனது செயலியில் இணைத்துள்ளது. 

யூ.பி.ஐ மூலம் பயனர் நேரடையாக பணத்தை செலுத்த இயலும். இதற்கு முன்னர் டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் மற்றும் கூகிள் ப்ளே மூலம் பிரீமியம் சப் கிரிப்ஷன் செலுத்தப் பட்டது. 

இப்போது யூட்யூப் மியூசிக் மற்றும் யூட்யூப் பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷன் பணத்தை யூ.பி.ஐ செயலிகளான BHIM, கூகிள் பே(Google Pay), போன் பே(Phone Pe), பேடியம்(Paytm) மற்றும் அமேசான் பே(Amazon Pay) போன்றவற்றில் செலுத்தலாம்.

YouTube UPI

யூட்யூப் பயனர் யூட்யூப் மியூசிக் மற்றும் YouTube premium சப்ஸ்கிரிப்ஷனை மாதத்திற்கு Rs.139 ஆகவும் 4 மாதத்திற்கு Rs. 399 ஆகவும் செலுத்தலாம். இதன்மூலம் விளம்பரம் இல்லாத வீடியோக்களை பயனர் கண்டு மகிழ்வதோடு எண்ணற்ற வீடியோக்களை பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் பின்னணியில் வீடியோக்களை இயக்கவும் செய்யலாம். யூட்யூப் மியூசிக் சப்ஸ்கிரிப்ஷன்  Rs. 99 செலுத்தி பயனர் யூட்யூப் பாடல்களை கேட்டு மகிழலாம். யூ.பி. ஐ செயலி மூலம் பணம் செலுத்தி யூட்யூப் படங்களை வாடகை அல்லது விற்பனைக்கு வாங்கி காணலாம். முதலில் யூட்யூப் யூ.பி.ஐ மூலம் சேனல் சப்ஸ்கிரிப்ஷனை செலுத்த அனுமதித்தது, ஒரு வாரத்திற்குள் தனது முடிவை மாற்றி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தது.