நீங்கள் எப்போதாவது கற்பனை செய்ததுண்டா வை-பை-யைப் பயன்படுத்தி இலவசமாக அழைப்புகளை செய்ய இயலும் என்று. ஆம், வாய்ஸ் ஓவர் வை-பை சிறப்பு அம்சத்தை பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ளலாம். மொபைல் போனில் வழக்கமான முறையை பயன்படுத்தாமல் வை-பை மூலமே இது சாத்தியமாகிறது. ஏர்டெல்(Airtel) மற்றும் ஜியோ(Jio) நெட்வொர்க்குகளில் இந்த சிறப்பு அம்சம் தற்போது கிடைக்கிறது. மக்கள் சிக்னல் குறைவான பகுதிகளில் இந்த அம்சத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வாய்ஸ் ஓவர் வை-பை அம்சத்தை எவ்வாறு ஸ்மார்ட் போனில் இயக்கநிலையில் வைக்கலாம்:
பெரும்பாலும் அநேக உயர்நிலை மற்றும் நடுநிலை வகை ஸ்மார்ட் போன்கள் இந்த அம்சத்தை பெற்றுள்ளன.
1. உங்கள் போனில் செட்டிங் ஆப்ஷனை திறக்கவும்.
2. ஆப்பிள் ஸ்மார்ட் போனாக இருந்தால் மொபைல் டேட்டா ஆப்ஷனில் வை-பை அழைப்பு மாற்றுவை எனேபில் செய்ய வேண்டும்.
3.ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் எனேபில் செய்ய,
சிம் கார்டு(Sim Card) & மொபைல் நெட்ஒர்க்(Mobile Network) -> சிம் கார்ட்(Sim Cards) -> வை-பை அழைப்புகள்(Wifi Calls)
( மேற்கண்ட படிநிலைகளை கடந்தும் வை-பை அழைப்பின் எனேபில் ஆப்ஷன் வரவில்லை என்றால் தற்போது உங்கள் ஸ்மார்ட் போனில் இந்த அம்சம் இல்லை)
வை-பை அழைப்புகளை ஏற்படுத்துவது எப்படி??
1.உங்கள் ஸ்மார்ட் போனை வை-பையுடன் இணைத்துக் கொள்ளுங்கள்.
2. வை-பை அழைப்பின் ஐகான் அறிவிப்பு (Notification Tray) தோன்றும்.
3.உங்கள் செல்லுலார் நெட்ஒர்க் பலவீனமாக இருந்தால் தானாக வை-பை அழைப்பு எனேபில் ஆகும்.
ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனம் கட்டணமின்றி வை-பை அழைப்புகள் செய்ய அனுமதித்துள்ளது.
குறிப்பு: சிக்னல் பலவீனமான இடங்களில் மட்டுமே வை-பை அழைப்புகள் இயங்கும், மற்ற நேரங்களில் வழக்கமான அழைப்புகள் இயங்கும்.
மற்ற செய்திகளையும் படித்து பகிருங்கள்:
யூ.பி.ஐ மூலமும் சந்தாவைச் செலுத்த அனுமதி வழங்கிய யூட்யூப்
வாட்ஸாப்: குழும அழைப்பின் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு??
GST திருத்தத்திற்கு பின் Rs.20,000க்குள் கிடைக்கும் சிறப்பான 5 ஸ்மார்ட் போன்கள்
நிகழ்நிலை வீடியோ சந்திப்பிற்கு "ZOOM" செயலி பாதுகாப்பானதா? மாற்றுச் செயலி பாதுகாப்பானதா??
எந்தெந்த நிறுவனங்கள் COVID-19 பாதிப்பின் காரணமாக ஸ்மார்ட்போன்களின் வாரண்ட்டி நாட்களை நீட்டித்துள்ளன?
மோட்டோரோலா எட்ஜ்+ பிரீமியம் ஸ்மார்ட் போன்களுக்கு போட்டியாக இருக்குமா ?
ஒன்பிளஸ் 8 சீரிஸ்: ஒன்பிளஸ் தயாரிப்பில் அதன் தடத்தை இழந்துவிட்டதா?