வாட்ஸாப்: குழும அழைப்பின் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு??

by Srinivasan
~1 minute
வாட்ஸாப்: குழும அழைப்பின் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு??

வாட்ஸப் நிறுவனம் தற்போது வெளியிட்ட செய்தியின் படி வீடியோ காலில் 8 நபர்கள் இணையலாம். இதற்கு முன்னர் வீடியோ காலில் அதிகபட்சமாக 4 நபர்கள் இணைய முடியும். COVID-19 சர்வேதேச தொற்றுதலுக்கு பின்பு வாட்சப் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பயனர் தன்னுடைய ஐபோன் அல்லது ஆப்பிள் ஸ்மார்ட் கருவியில் சமீபத்திய வாட்சப் செயலியை இறக்க வேண்டும். ஒரு பயனர் கால் ஐகானை அழுத்துவதன் மூலம் கால் குழுமத்தில் இணைந்து ஒவ்வொரு  நபராக இணைத்துக் கொள்ளலாம்.

இந்த சமீபத்திய வெளியீட்டை ட்விட்டர் மற்றும் ப்லோக் போஸ்ட் வழியாக வெளியிடப்பட்டுள்ளது. எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷன் தொழிற்நுட்பத்தின் உதவியால் மிகவும் பாதுகாப்பு வாய்ந்ததாக வாட்சப் கால் கருதப்படுகிறது.

COVID-19 முடக்குதலால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடம் உரையாட "ZOOM" செயலியை பயன்படுத்தி வருகின்றன. "ZOOM" செயலி பாதுகாப்பு அற்றது என்ற செய்தி பரவி வரும் நிலையில் அதற்கு மாற்றாக பயன்படுப்படும் செயலியைப் பற்றிய விவரம்  முந்தைய பதிவில் குறிப்பிடப் பட்டுள்ளது.